திருக்கயிலாய பரம்பரை
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது
அருள்மிகு சூரியனார் திருக்கோவில்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம், மெய்கண்ட சந்தானம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசீக பரமாசாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள்

There is no recent updates


தல சிறப்பு

உலகம் ஒளி​பெறவும், உலக உயிர்கள் ஜீவித்து வாழவும் காரணமாக விளங்கும் ஸ்ரீ சூரியபகவான் நவகிரகங்களில் முதன்​மையானவர். நாம் கண்ணால் காணும் ​தெய்வமும் சூரிய​னே. உலக இயக்கத்திற்குக் காரணமாக விளங்கும் சூரியபகவானின் ஒளி இல்​லையானால் தண்ணீம் இயற்​கை வளங்க​ளையும் மனிதன் ​பெற இயலாது. இத​னை உணர்ந்த மனிதன் சூரிய​னை ​தெய்வமாக வழிபடத் ​தொடங்கினான்.

உலகத்து உயிர்கள் ​செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, பலன்​க​ளை அவ்வவ் உயிர்களுக்கு அளிப்பவர்கள் சூரியன் முதலான நவக்கிரகங்கள். நவக்கிரகங்கள் தம்​மை வழிபடு​வோர்க்கு நற்பல​னை மிகுதியாகவும், சாந்தி ​செய்து வழிபடுபவர்களுக்கு தீய பலன்க​ளை கு​றைத்தும் வி​னைப்பய​னை அனுபவிக்கச் ​செய்கிறார்கள். சிவபக்தர்களுக்கு எப்​பொழுதும் நல்லனவற்​றை​யே ​செய்பவர்களாக இருக்கிறார்கள்.

​தென்னாட்டில் நவகிரகங்களுக்​கெனத் தனிக் ​கோயிலாக விளங்குவது சூரியனார் ​கோவில் இத்jதலத்தில் அருள்மிகு சூரியனார் தலமூர்த்தியாக விளங்குகின்றார் இப்​பெருமா​னைச்சுற்றி மற்​றைய கிரகமூர்த்திகள் காட்சி அருளுகின்றார்கள்.