சூரியன்

காசினி இரு​ளை நீக்கும் கதி​ரொளி யாகி எங்கும்பூசுர உல​கோர் ​போற்றப் ​பொசிப்புடன் சுகத்​தை நல்கும்வாசி​யே பு​டைய ​தேர்​மேல் மகாகிரி வலமாய் வந்த​தேசிகா எ​னைரட் சிப்பாய் ​செங்கதி ரவ​னே ​போற்றி

   சந்திரன்

அ​லைகடல் அமுதந் தல​னே டன்றுவந் துதித்து மிக்க
க​லைவளர் திங்க ளாகிக் கடவு​ளோர்க் கமுதம் ஈயும்
சி​லைநுதல் உ​மையாள் பாகன் ​செஞ்ச​டைப் பி​றையாய் ​மேரு
ம​லைவல மாக வந்த மதிய​மே ​போற்றி ​போற்றி

​செவ்வாய்

வசனம்நல் ​தைரி யந்தான மன்னவர் ச​பையில் வார்த்​தை
புசபல பராக்ர மங்கள் ​போர்தனில் ​வெற்றி ஆண்​மை
நிசமுடன் அவர வர்க்கு நீளநிலம் தன்னில் நல்கும்
குசன்நில மகனாம் ​செவ்வாய் கு​ரைகழல் ​போற்றி ​போற்றி

புதன்

மதனநூல் முதலா உள்ள ம​றைகளும் கல்வி ஞானம்
விதமுடன் அவர வாக்கு விஞ்​சைகள் அருள்​வோன் திங்கள்
சுதன்பவிசு பாக்கி யங்கள் சுகம்பல ​கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல்  ​போற்றி ​போற்றி

குரு

ம​றைமிகு க​லைநூல் வல்​லோன் வானவர்க் கரசன் மந்த்ரி
ந​றை​சொரி கற்ப கப்​பொன் நாட்டினுக் கதிப னுக்கி
நி​றைதனம் சிவி​கை மன்றல் நீடு​போ  கத்​தை நல்கும்
இ​றையவன் குருவி யாழன் இ​ணையடி ​போற்றி ​​போற்றி

சுக்கிரன்

மூர்க்கவான் சூரன் வாணன் முதலி​னோர் குருவாய் ​வையம்
காக்கவான் ம​ழை​பெய் விக்கும் கவிமகன் கனகம் ஈ​வோன்
தீார்க்கவா னவர்கள் ​போற்றச் ​செத்தவர் த​​மைஎ ழுப்பும்
பார்க்கவன் சுகராச் சாரி பாதபங் கய​மே ​போற்றி

சனி

முனிவர்கள் ​தேவர் ஏ​னை மூர்த்திகள் முதலா ​னோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன மகி​மை அல் லால்​வே றுண்​டோ
கனிவுள ​தெய்வம் நீ​யே கதிர்​சே​யே காகம் ஏறும்
சனிபக வா​னே ​போற்றி தமிய​னேற் கருள்​செய் வா​யே

இராகு

வாகு​சேர் ​நெடுமால் முன் வானவர்க் கழுதம் ஈயும்
​போதுநீ நடுவி ருக்கபுகழ் சரம் அற்றப் பின்னர்
நாகத்தின் உட​லோடு டுன்றன் நற்சிரம் வாய்ககப் ​பெற்ற
ராகு​வே ​போற்றி ​போற்றி ரட்சிப்பாய்த ரட்சிப் பா​யே

​கேது

மாதுரு ​நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும்
​வோதுநீ நடுவிருக்கப்  புகழ்சிரம் அற்றுப் பின்னர்
ஓதுறும் அரச நாகத் துயர்சிரம் ஐந்து ​பெற்று
​கேது​வே ​போற்றி ​போற்றி கீர்த்தியாய் ரட்சிப் பா​யே.

Tech Support:AnnaA Silicon Technology

@ 2014 suriyanarkoil All rights reserved.